கிருஷ்ணகிரி, செப். 06 –
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை, தனியார் பள்ளிகள் இயக்ககம் சார்பாக தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POSCO) விழிப்புணர்வு பயிற்சியை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தே. மதியழகன் (பர்கூர்), ஒய். பிரகாஷ் (ஓசூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, தனியார் பள்ளிகள் இயக்குநர் முனைவர் பெ. குப்புசாமி, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் முனைவர் ச. சுகன்யா, பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் வி. முத்துக்குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



