நிலக்கோட்டை அக்.06
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றுக் கரையில் அமைந்துள்ள சுமார் 800-ஆண்டுகள் பழமையான அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் நவராத்திரி வாரமான புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்,
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது,
பக்தர்கள்
நீண்ட வரிசையில் காத்திருந்து வெற்றிலை
துளசிமாலை வடைமாலை சாத்தி,நெய்விளக்கேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டனர்,
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் வைகை பாரம்பரிய இயக்கம் சார்பில் அருண்பாண்டி தலைமையில் 51-வது வாரமாக அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது,