சென்னை. கொருக்குப்பேட்டையிலுள்ள சௌந்தர் மருத்துவமனை சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு மாபெரும் இலவச மருத்துவ முகாம் மருத்துவமனை எதிரில் உள்ள மரியம் மஹாலில் நடைபெற்றது.
இந்த முகாமில்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மருத்துவ அணி மாநில பொதுச் செயலாளர் டாக்டர் எஸ்.ஷியாம் சாகர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வடசென்னை.
கே.சௌந்தர்ராஜன் தலைமையில் தமிழ்நாடு மாணவர் காங்கிரசின் முன்னாள் தலைவர் பி.பிரபுதாஸ் முன்னிலையில் டாக்டர் ஸ்ரீநிதி சிதம்பரம் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் இந்த மருத்துவ முகாமில் மூன்று மாத சர்க்கரை அளவு பரிசோதனை, இரத்த சோகை சர்க்கரை நோயாளிகளுக்கான டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் முழு கண் மருத்துவ பரிசோதனைகள், உடலில் கொழுப்பு, தசை, எலும்பு ஆகியவைகளின் கண்டறியும் பரிசோதனை, பல் மருத்துவ பரிசோதனை பிசியோதெரபி பரிசோதனை நிவாரணத்திற்கான சிறப்பு பிசியோதெரபி சிகிச்சைகள் உள்ளிட்ட பரிசோதனைகள் கட்டணம் இல்லாமல் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த முகாமில்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் என்.அருள் பெத்தையா, மருத்துவ அணி மாநில தலைவர் டாக்டர் எம்.பி.கலீல் ரஹ்மான், என்.காமராஜ் ஏழுமலை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்தனர்.
இந்த முகாமில், கொருக்குப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.