புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
சேலம் மாவட்டம் வீரபாண்டி கிழக்கு ஒன்றியத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா முன்னிட்டு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கழகப் பொதுச் செயலாளர்,தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் புரட்சித் தமிழர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க, சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர் இளங்கோவன் அறிவுறுத்தலின்படி, வீரபாண்டி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் வீரபாண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம். வெங்கடேசன் ஏற்பாட்டில் வீரபாண்டி சட்ட மன்ற உறுப்பினர் எம்.ராஜமுத்து கொடியேற்றி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. உடன் கமலா கருப்பணணன், சித்துராஜ், இளம்பிள்ளை பேரூர் கழகச் செயலாளர் கிருஷ்ணன், அரியானூர் பழனிசாமி, ராக்கிப்பட்டி கிருஷ்ணன், சீரகாப்பாடி கே.செல்லாண்டி ,கே.ஸ்.பி.சரவணன், வடிவேல், எஸ்.எம். ஆர்.மாதேஸ்வரன் , AKP குட்டி (எ) ஆறுமுகம், L.K. வெங்கடேசன், அப்பு (எ)சந்தோஷ்குமார், சதீஷ்குமார், கருணாநிதி, எஸ். எஸ் .ஆர். பழனிசாமி, D.I. உதயகுமார், துரைசாமி, முருகேசன், பழனிசாமி, கண்ணன், ஜீவா, சேதுபதி , ஜெயபிரகாஷ் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.