76-வது குடியரசு தின விழா
மதுரை கோ.புதூர், அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் 76வது குடியரசுதின விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை தாங்கினார். உதவித் தலைமையாசிரியர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஷேக்நபி வரவேற்புரையாற்றினார்.
இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமிதுரை தேசிய கொடியினை ஏற்றிவைத்து தேச ஒருமைப்பாடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள் பற்றியும் சிறப்புரையாற்றினார்.
கோவை வேளாண்மை பல்கலைக்கழக மேலாண்மை குழு உறுப்பினர் பிரான்சிஸ் பாஸ்டின், மதுரை இளங்கோ முத்தமிழ் மன்ற செயலாளர் புலவர்.வை.சங்கரலிங்கனார். மதுரை மாவட்ட நிர்வாகிகள் பழனிச்சாமி, மாரியப்பன், மன்சூர், வி.எம்.அறக்கட்டளை செயலாளர் குமரன், தமிழ் ஆர்வலர் ஆதித்தா, வேலுதாஸ் ஆகியோர் கௌரவ அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தமிழாசிரியர் தௌபிக் ராஜா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். தொழிற்கல்வி ஆசிரியர் முகைதீன் பிச்சை நன்றியுரையாற்றினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.