சேலம்,பிப்.03
சேலம் அம்மாபேட்டை ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 62 ஆம் ஆண்டு ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் தலைமை விருந்தினராகவும், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பிந்து சரவணன் கௌரவ விருந்தினராகவும் அருட் சகோதரர் சி.எஸ்.சி புரொவின்ஷியல் சுப்பீரியர் பிரதர்ஸ் ஆப் ஹோலி கிராஸ் பி.ஜே.சந்தோஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் ஆரோக்கியமற்ற உணவுகளின் தீமைகளை பற்றியும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் மிக விளக்கமாக எடுத்துரைத்தனர். மேலும் மாணவர்களின் எதிர்கால நலனை பற்றியும் சிறப்புரையாற்றினர். பின்னர் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் அருள் சகோதரர் சேசுராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். அதனைத் தொடர்ந்து அகாடமி எக்ஸலன்ஸ் எக்ஸாம்,டாப் ரேங்கர்ஸ், பெஸ்ட் ஆல் ரவுண்டர் ஆகிய தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.
ஹோலி கிராஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் அருள் சகோதரர் ஸ்டீபன் ஆனந்தராஜ், தொடக்கப்பள்ளி துணை முதல்வர் அருட் சகோதரர் அருள் ஜீவன்,பள்ளியின் நிர்வாகி அருட் சகோதரர் ஏசுதாசன் ஆகியோரின் தலைமையில் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பள்ளியின் துணை முதல்வர் அந்துவான் குணசீலன் மற்றும் ஆசிரியர் குழுவினர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.