கன்னியாகுமரி நவ 6
குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 4 திருமணம் செய்த இளம்பெண் ஒருவர், 5வது திருமணம் செய்ய முயன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தன்னுடைய உறவினர்களுடன் வந்து, பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “நான் கட்டிட வேலை பார்த்து வருகிறேன். திருமணமாகி, மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பியபோது, என்னுடைய மனைவி மாயமாகி இருந்தார். எனவே, காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இரணியல் போலீசாரும், இதுகுறித்து விசாரணையை துவங்கி, காணாமல் போன மனைவியை தேட துவங்கினர். அப்போதுதான், கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை சந்திக்க, மனைவி கிளம்பி வந்திருப்பதும், அந்த இளைஞருடன் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதும் கணவருக்கு தெரியவந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், இதுகுறித்து இரணியல் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசாரும், சம்பந்தப்பட்ட இளைஞரின் போனில் தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்தனர்.
அதற்கு அந்த இளைஞர், தான் யாரையும் அழைத்து வரவில்லை என்று கறாராக சொன்னார்.. ஆனாலும், போலீசாருக்கு சந்தேகம் அதிகமாகி, இளைஞர் குறித்த தகவல்களை திரட்டினார்கள்.அப்போதுதான், அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து, திண்டுக்கல் பெண்ணை திருமணம் செய்ய போவது உறுதி என்று தெரியவந்தது.. அதுமட்டுமல்லாமல், திருமணத்துக்கான ஏற்பாடுகளும் நடப்பதை கண்டறிந்தனர்.இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணையும், இளைஞரையும், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். திண்டுக்கல் தொழிலாளியை தவிக்க விட்டு ஓடிவந்த மனைவிக்கு ஏற்கனவே 3 முறை கல்யாணம் ஆகிவிட்டதாம்.. திண்டுக்கல் தொழிலாளி 4வது கணவன் ஆவார்.
ஆனால், அவர் தினமும் குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து தன்னை தாக்குவதாகவும், அவரது செயல்பாடுகள் பிடிக்காமல்தான், தன்னுடன் வேலை செய்த குமரி மாவட்ட இளைஞருடன் இணைந்து வாழ விரும்பி, அவரை 5வது திருமணம் செய்ய முடிவு செய்ததாகவும் கூறினார். இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார், “முறைப்படி விவாகரத்து செய்யாமல், இன்னொரு திருமணம் செய்யக்கூடாது.. அது சட்டப்படி தவறானது” என்று அப்பெண்ணுக்கு விளக்கினார்கள்.. அத்துடன், கணவர், 2 குழந்தைகளுடன் மீண்டும் இணைந்து வாழவும் அறிவுரை வழங்கினார்கள்.. போலீசார் எவ்வளவோ சொல்லியும், அந்த பெண், கணவர் மற்றும் 2 குழந்தைகளை உதறிவிட்டு பேயன் குழி இளைஞருடனேயே சென்று விட்டாராம். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.