திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தல் மலைமேல் சாத்தார் உடையார் அய்யனால் கோயில் 58 ஆம் ஆண்டு சமத்துவ எருது கட்டு விழா இன்று நடந்தது. விழாவை துவங்கி வைத்த காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ மாடுபிடி வீரர்களுக்கு சீருடை வழங்கினார். தாதனேந்தல் ஊராட்சி தலைவர் கோகிலா ராஜேந்திரன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தலைவர் புல்லாணி, மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், ராமநாதபுரம் நகராட்சி துணை தலைவர் பிரவீன் தங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் 30 காளைகள், 200வீரர்கள் பங்கேற்றனர்.



