வேலூர்=20
வேலூர் மாவட்டம், வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) 53வது கல்லூரி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது கல்லூரி செயலர் பொறியாளர் டி மணிநாதன் விழாவினை துவக்கி வைத்தார் .கல்லூரியின் தலைவர் டாக்டர் த. சிவகுமார் முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினர்கள் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர். பானுமதி வரவேற்புரையாற்றினார் .விழாவிற்கு முனைவர் அம்துல்ஹசிஸ், முதல்வர் மற்றும் தலைவர் ஜஸ்டிஸ்பஷீர் அகமத் சையது பெண்கள் கல்லூரி தன்னாட்சி சென்னை ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கு கல்வி உயர்ந்த வாழ்க்கையை அளிக்கும் ,பெண்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக வாழ வேண்டும் எதையும் துணிச்சலுடன் எதிர் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று சிறப்புயாரையாற்றினர். பிற கல்லூரிகளுக்கு சென்று தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாலைநேரம் மாணவியர்களுக்கு கல்லூரியின் சார்பில் பரிசுகள் வழங்கினர்.