ராமநாதபுரம், ஜூலை 11 –
ராமநாதபுரம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சிங்காரத்தோப்பு மூலக்கொத்தளம் வனசங்கரி அம்மன் கோயில் தெரு, சத்யா நகர் மாரியம்மன் கோவில் தெரு மற்றும் காட்டு பிள்ளையார் கோவில் தெரு ஆகிய இடங்களில் 50 மாடுகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் ராமநாதபுரம் கால்நடை மருத்துவமனை கால்நடை மருத்துவர் டாக்டர் மருதுபாண்டி குழுவினரால் தடுப்பூசி போடப்பட்டது.