கயத்தாறுயில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாள் விழா :- கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கயத்தாறில் உள்ள மாவட்ட கவுன்சிலர் அலுவலகத்தில் கேக் வெட்டி கழக நிர்வாகிகளுடன் பிறந்த நாள் விழாவை மாவட்ட கவுன்சில் பிரியா குரு ராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது, அதனைத் தொடர்ந்து, கோவில்பட்டி முடுக்குமீட்டான்பட்டியில் உள்ள மன நோய் காப்பகத்தில் உள்ள மன நோயாளிகளுக்கு புதிய போர்வை மற்றும் பெண்களுக்கு புதிய நைட்டிகள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் வானரமுட்டி பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார், திமுக ஆதிதிராவிடர் அணி ஜெபசிங், தெற்குஇலந்த குளம் கிளைச் செயலாளர் ஆறுமுக பாண்டியன், கரிசல் குளம் திமுக கிளை செயலாளர் சுப்புராஜ், ஓலைகுளம் இளைஞர் அணி மணிகண்டன், ராஜாபுதுகுடி திமுக கிளை செயலாளர் சதீஷ், புனித ராஜ், மாடசாமி,பால்ராஜ், யாக்கோபு, ஆகியோர் கலந்துகொண்டனர்.



