சங்கரன்கோவில் துணை மின் நிலையத்திற்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு நவீன ரகபுதிய சர்க்யூட் பிரேக்கர் அமைக்கும் பணி ராஜா எம்எல்ஏ ஆய்வு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 110 கேவி துணை மின்நிலையத்தில் 110 கேவி திறன் கொண்ட பெல் நிறுவனத்தின் ஏர் மூலம் இயங்கக்கூடிய சர்க்யூட் பிரேக்கர் சுமார் 40 ஆண்டுகள் இயக்கத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் 110 கேவி திறன் கொண்ட சீமன்ஸ் கம்பெனியின் கேஸ் மூலம் இயங்கக்கூடிய புதிய சர்க்யூட் பிரேக்கர் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் சங்கரன்கோவில் மின்வாரிய பொறியாளர்கள், பணியாளர்களுடன் தாழையூத்து சிறப்பு பராமரிப்பு பொறியாளர்,மின் அளவி ஆய்வக பொறியாளர் மற்றும் சீமன்ஸ் நிறுவன பணியாளர்கள் மூலம் முழு வீச்சில் பணி நடைபெற்று வருகிறது இந்நிலையில் இந்த பணியினை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்பொழுது சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் , சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன்,நகர்ப்புற உதவி செயற்பொறியாளர் குபேல்ராஜ்மோகன், கிராமப்புற உதவி செயற்பொறியாளர் தங்கராஜ் ,சிறப்பு பராமரிப்பு பிரிவு உதவி செயற்பொறியாளர் காமராஜ் , இளநிலை பொறியாளர்கள் பால்ராஜ், கணேஷ்ராமகிருஷ்ணன், ராஜலிங்கம் ,உதவி பொறியாளர்கள் கருப்பசாமி, கருங்காட்டான், மின்வாரிய தொமுச திட்ட செயலாளர் மகாராஜன், தங்கமாரிமுத்து ,திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் உடன் இருந்தனர்.