ஊட்டி. ஜன. 31.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் தாட்கோ மூலம் நீலகிரி மாவட்டத்தில் 399 நபர்களுக்கு ரூ. 5, 26 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முதல்வர் மு. க. ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மற்றும் மாவட்ட தாட்கோ மூலம் முதலமைச்சரின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பிரதம மந்திரி அணு சுசித் ஜாதி அபுய்தய் யோஜனா திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவி திட்டம், கல்வி கடன் உதவி திட்டம் ஆகியன செயல்படுகிறது. துரித மின் இணைப்பு திட்டம் என ஆதிதிராவிடர்களுக்கான பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டு வசதி மேம்பாட்டு கழகம், தாட்கோ மூலம் நீலகிரி மாவட்டத்தில் 07. 05-2021 முதல் தற்போது வரை நன்னில மகளிர் நில உரிமை திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கு ரூபாய் 24.50 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 234 நபர்களுக்கு ரீ. 1.50 கோடி மானியமாகவும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 88 நபர்களுக்கு ரூ. 1.71 கோடியை மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்கான பொருளாதார கடன் உதவி திட்டத்தின் கீழ் 34 நபர்களுக்கு ரூ. 94.50 லட்சம் மானியமும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 31 நபர்களுக்கு ரூ. 84.60 லட்சம் மானியமாகவும் பிரதம மந்திரி அணு சுசித் ஜாதி அபுதய் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழு நபர்களுக்கு ரூ. 3.50 லட்சம் மானியமாகவும் என மொத்தம் 399 நபர்களுக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம், தாட்கோ மூலம் மானிய விலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைந்து பயனாளிகள் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக இளைஞர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் இது போன்ற பல நல்ல திட்டங்களை ஆதிதிராவிடர் மற்றும் நீலகிரி மாவட்ட பழங்குடி மக்களுக்கு தாட்கோ மூலம் பல உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்வியா தண்ணீரு தெரிவித்துள்ளார்.