சேலம், ஜூலை 8 –
சேலம் மாவட்ட அமெச்சூர் தேக்வாண்டோ சங்கம் சார்பில் 34-வது சேலம் மாவட்ட அளவிலான தேக்வாண்டோ சேம்பியன்ஷிப் 2025 போட்டி சிவதாபுரம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 18 மாவட்ட சங்கங்கள் சேர்ந்து நடத்தியது. இதில் 567 மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு சில்வர் மெடல், கோல்ட் மெடல் மற்றும் பிரிண்டேட் சான்றிதழ் வழங்க உள்ளனர். மேலும் இதில் வெற்றி பெறும் மாணவர்கள் திருவாரூரில் நடைபெறும் சப் ஜூனியர் போட்டிக்கு அழைத்துச் செல்வார்கள்.
மேலும் சீனியர், ஜூனியர் பிரிவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் போட்டிக்கு தேர்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் டாக்டர் ஐசரி கணேஷ், மாநில பொது செயலாளர் செல்வமணி, மாநில பார்வையாளர் ஸ்டாலின், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் பெரியசாமி, பி. விஜயகுமார், விஜயகுமார், போட்டியின் சேர்மன் கோகுலம் ஹாஸ்பிடல் எம்டி அர்த்தனாரி, கிளப் தலைவர் மகா தேவன், லட்சுமி காந்தன் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். மேலும் தேசிய நடுவர்கள், மாநில நடுவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



