தென்காசி மாவட்ட தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்முன்பு ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஆரோக்கிய ராசு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சுதர்சன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் கனகராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி முன்னிலை வகித்தார் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் ஸ்டீபன் சேவியர் ஞானம் அனைவரையும் வரவேற்று பேசினார் . சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்த வேண்டும் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக வழங்கிட வேண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை கலந்திட வேண்டும் அரசாணை 243 ரத்து செய்திடல் வேண்டும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமன ஆணை மற்றும் ஊதியம் வழங்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக நிரந்தர தொடர் அங்கீகாரம் கால தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பது உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியன் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் டிட்டோஜாக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினருமான ராஜ்குமார், மாநில உயர் மட்ட குழு மருது பாண்டியன், வாசு ,ராமர் ஆகியோர்,கோரிக்கை விளக்க சிறப்புரையாற்றி மாநில உயர்மட்ட குழு உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் ராஜேந்திரன் பேசினார் ஆர்ப்பாட்ட இறுதியில் தென்காசி வட்டார டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளருமான ராஜ்குமார் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்து கலந்து கொண்டனர். 31 அம்ச கோரிக்கை நிறைவேற்ற படாவிட்டால் வருகிற செப்டம்பர் 29,30.அக்டோபர் 1 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெறும் தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தில் தென்காசி மாவட்டத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது