தருமபுரி, ஜூலை 28 –
தருமபுரி மாவட்ட திமுக அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி முன்னிலையில் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் பி. பெரியண்ணன் ஏற்பாட்டில் 200 பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். புதியதாக திமுகவில் இணைந்தவர்களை வரவேற்று திமுக இருவர்ண துண்டை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் புதியதாக திமுகவில் இணைந்தவர்கள் இன்று முதல் தமிழக முதல்வர் தமிழக மக்களுக்காக ஆற்றிவரும் பணிகளை ஒவ்வொருவரும் வீடு வீடாக சென்று எடுத்துரைத்து பணியாற்ற வேண்டுமென்று கூறினார்.
இந்நிகழ்வில் நகர செயலாளர் நாட்டான் மாது, துணைச் செயலாளர் முல்லை வேந்தன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், காவேரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கௌதம், துணை அமைப்பாளர் உதயசூரியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.