மதுரை, ஆகஸ்ட் 9 –
மதுரை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்: தமிழ் மக்கள் வாக்கு செலுத்தி தேர்வு செய்த அரசு தானே இதில் எங்கு திராவிட மாடல் வருகிறது. தமிழ் தேசியத்தை நாங்கள் பேசும் போது யார் இருக்கிறார்களோ அவர்கள் தான் எதிரி. இதை நான் பேசுவதற்கு முன்பாக 2006-ல் பேசியது யார் எங்கள் அண்ணன் தான் அப்போது கைகட்டி உட்கார்ந்து இருந்தார். பெரியார் அண்ணா வழியில் வந்தவர்கள் என நீங்கள் செய்யாததை ஜெயலலிதா அம்மையார் செய்தார்களா இல்லையா.
ஒரு பொது தொகுதியில் ஆதிதிராவிட தமிழரை நிறுத்த முடிந்ததா? இந்த தேர்தலாவது பொதுத் தொகுதியில் நிறுத்த வைப்பீர்களா? திமுகவின் பொதுத் தொகுதி கேட்டு வாங்குவதற்கு என்ன பாடுபடுகிறார் எங்க அண்ணன் தெரியுமா? (திருமாவளவன்)
பொது தொகுதிக்கு ஆசைப்படக்கூடாது என ஏற்கனவே பதிவு பண்ணியிருக்கிறார்கள்.
மத்திய கல்வி கொள்கைக்கு மாறாக மாநிலக் கல்விக் குறித்த கேள்விக்கு “எட்டாம் வகுப்பு வரை தேர்வு இல்லாத தேர்ச்சி முறை என்பது தான் நம்மாழ்வார் கூறியது. எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்னதாக ஒன்பதாம் வகுப்பு பொது தேர்வு ஏற்படுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தாலே உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பின் போது இப்படி ஒரு எண்ணம் வருகிறது என்றால் மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்புகளில் தோற்றுப் போனால் கல்வி என்பது பிஞ்சு நெஞ்சில் நரகமாக மாறிவிடும். படிக்க வேண்டும் என்ற எண்ணமே போய் மன நோய்க்கு தள்ளப்படும்.
கல்வியில் சிறந்த நாடாக விளங்கக்கூடிய தென் கொரியாவே எட்டு வயதில் தான் ஒன்றாம் வகுப்பு சேர்க்கப்படுகிறது. ஆனால் எட்டு வயதில் நம் பொதுத் தேர்வு எழுத சொல்கிறோம். எனவே அந்த முறையை நாங்கள் ஏற்கவில்லை. எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்ப்போம். மூன்று ஐந்து எட்டாம் வகுப்புகளில் பொது தேர்வு கொண்டு வருவது என்பது ஏற்புடையதல்ல. பல கோடி ரூபாய் பணம் கட்டி படிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டு கல்வியும் மருத்துவமும் கண்கள் என கூறுவது வார்த்தையில் சொல்லிவிட்டு போக வேண்டியதுதான். உங்களுக்கு இரண்டு கண்ணாக இருக்கலாம். உங்கள் ஆட்சியில் கொடிய புண்ணாக உள்ளது. கிண்டம் படம் திரையிடப்படாது தணிக்கை அதிகாரிகள் இதில் கவனமாக இருக்க வேண்டும். சட்ட ஒழுங்குப் பிரச்சினை வந்தால் என்ன செய்வது எப்படி தணிக்கை கொடுக்கிறீர்கள்.
பாமக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவை வீழ்த்துவோம் என தீர்மானம் நிறைவேற்றியது குறித்த கேள்விக்கு தீர்மானத்தை வரவேற்கிறேன் என்று கூறினார்.