மதுரை ஜூன் 24,
மதுரை மீனாட்சி கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு 3 நாட்கள் நடைபெறுகிறது
மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் 2024-25-ம் ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவிகள் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு 25-ந்தேதி தொடங்குகிறது என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் தினமும் காலை 9 மணிக்கு மீனாட்சி கல்லூரி கயல் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் 25-ந்தேதி பிளஸ்- 2-ல் கணிதம், கணினி அறிவியல் படித்து கணினி அறிவியல் பாடத்திற்கு விண்ணப் பித்தவர்களுக்கு இரண்டு சுழற்சிகளிலும், பிளஸ்-2-ல் கணிதம், உயிரியல் படித்து கணினி அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பித்தவர்க ளுக்கும், கணினி பயன்பாட்டியல் பாடத்திற்கு விண்ணப் பித்தவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. மேலும் கணிதம் (ஆங்கிலவழி) பாடத்திற்கு இரண்டு சுழற்சிகளிலும், கணிதம் (தமிழ் வழி)
வேதியியல்(தமிழ் மற்றும் ஆங்கில வழி), இயற்பியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), விலங்கியல்(தமிழ் மற்றும் ஆங்கில வழி), தாவரவியல், மனையியல், மனையியல்(தொழிற் கல்வி) ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
26-ந்தேதி வணிகவியல் பாடத்திற்கு இரண்டு சுழற்சிகளிலும், வணிகவியல் தொழிற்கல்வி), வணிக நிர்வாகவியல், பிளஸ்-2-ல் அறிவியல் பாட பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாட பிரிவில் படித்து வணிக நிர்வாகவியல் பாடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கும் வரலாறு (தமிழ் மற்றும் ஆங்கில வழி), பொருளாதாரம்(தமிழ் மற்றும் ஆங்கில வழி), புவியியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), வரலாறு (தொழிற்கல்வி), பொருளாதாரம் (தொழிற்கல்வி) ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 27-ந்தேதி பொதுத்தமிழ் படித்து தமிழ் பாடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு சுழற்சிகளிலும், ஆங்கிலம் பாடத்திற்கு இரண்டு சுழற்சிகளிலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு குறித்த தகவல்கள் மாணவிகளுக்கு மூலமும் அனுப்பப்படும். கலந்தாய்வில் கலந்து கொள்பவர்களுக்கு காலியிடங்கள், மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு ஆகியவற்றின்
அடிப்படையில் மட்டுமே சேர்க்கை உறுதி செய்யப்படும். மாணவிகளின் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் கல்லூரி இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவிகள், தலைமை ஆசிரியர்கள் கையொப்பமிட்ட அசல் எஸ். எஸ்.எல்.சி., பிளஸ்-1. பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், அசல் பள்ளி மாற்று சான்றிதழ், இணைய வழி சாதி சான்றிதழ் அல்லது இணைய வழி ஒப்புகை சீட்டு, வங்கி சேமிப்பு புத்தக முதல் பக்க நகல், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பபடிவ நகல், கலந்தாய்வு அழைப்பு நகல், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி கட்டணம்(தோராயமாக) ரூ.2,650 மற்றும் ஆதார் அட்டை இணைக்கப்பட்ட செல் போன் எண்ணுடன்
பாடவாரியான கலந்தாய்வு அன்று மாணவிகள் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்தாய்வு அன்று வரவில்லை என்றால் கல்லூரியில் வாய்ப்பு பெற இயலாது. இந்த தகவலை கல்லூரி முதல்வர் வானதி தெரிவித்துள்ளார்.