திண்டுக்கல்லில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பாக புரட்சியாளர் அல்ஹாஜ் ஷஹீத் டாக்டர். பழனி பாபாவின் 28 -வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுக்கூட்ட நிகழ்ச்சி திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள திப்புதிடலில் இந்நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய லீக் கட்சியின்
மாநிலத் தலைவர் தடா J. அப்துல்ரஹீம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு
தலைமை நிலைய செயலாளர் A.இம்ரான் முன்னிலை வகித்தார். இப்பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மௌலானா ரஹீம்,கம்பம் சாதிக், திருப்பூர் அஸ்ஸலாம், திருப்பூர் மஜீத், பைரோஸ்பாபா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மூத்த வழக்கறிஞர் வேங்கை சந்திரசேகர், பசுபதி பாண்டியன் புதல்வி சந்தன பிரியா, வழக்கறிஞர் காஸ்ட்ரோ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் B.ஷேக்பரீத்,திண்டுக்கல் மாவட்ட தொழில் சங்கத் தலைவர் A.கணவாய் இப்ராகிம் , திண்டுக்கல் நகரப் பொருளாளர் S.M. சேக்பரீத் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இந்திய தேசிய லீக் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக்களை மாநில பொதுச் செயலாளர் மல்லிப்பட்டினம் இம்ரான் சிறப்பாக செய்திருந்தார்.இப்பொதுக்கூட்டத்தில் போது தீர்மானங்களான சென்னை மத்திய புழல் சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் பன்னாஇஸ்மாயில், பிலால் மாலிக், போலீஸ் பக்குரூதீன் ஆகியோர் மீது சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொடுமையாக தாக்கியுள்ளனர். இத்தகைய செயலை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் இந்த கொடுரமான செயலை செய்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
PFI முன்னாள் தலைவர் அபூபக்கர் அவர்கள் கடுமையான நோய்களால் பீடிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக பரோல் அல்லது வீட்டுக்காவலில் வைத்து சிகிச்சைக்கு அனுமதியளிக்க குடும்பத்தார்கள் கேட்டும் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இவருக்கு பரோல் அல்லது வீட்டுக்காவலில் வைத்து சிகிச்சைக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தொடர்ச்சியாக காவல்துறையினர் பொய் வழக்குகளை போட்டு வருகின்றனர். இத்தகைய செயலை இந்தக் கூட்டம் கண்டிப்பதோடு பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும் என்று இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
மதுரை, திருப்பரங்குன்றம் சிக்கந்தா மலையில் இருக்கக் கூடிய தர்காவில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் தடை விதித்து வருகின்றனர். மேலும் இந்த அதிகாரிகள் ஒருதலைபட்சமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய செயலை இந்தக் கூட்டம் வன்மையாக கண்டிப்பதோடு, தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு சிக்கந்தா மலை தர்காவில் அனைத்து நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கின்றது உட்பட நான்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில்
திண்டுக்கல் நகர செயலாளர் S.ஜலாலுதீன் நன்றி கூறினார்.