நாகர்கோவில் ஜூலை 29
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் விழாவில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா ஆகியோர் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, முன்னிலையில் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்:-
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மாற்றுத்திறனாளிகளை சமூகத்தில் பிறர் மதிக்கும் வகையிலும், எல்லாரையும் போல் அவர்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள். நலஉதவிகள் சென்றடைய வேண்டுமென்ற சீரிய நோக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துறையினை தோற்றுவித்தார். மேலும் ஊனமுற்ற மாற்றுத்திறன் படைத்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை, திருமண உதவிகள் கல்வி உதவி தொகை உள்ளிட்டவைகள் வழங்கி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்கள். கலைஞர் வழியில் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அனைத்து பொதுமக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சிதிட்டப் பணிகள் சென்றடைய வேண்டுமென்ற ஒரே நோக்கில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டுமென்பதே தமிழ்நாடு முதலமைச்சரின் இலட்சியமாகும்.
மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தன்நம்பிக்கையுடன் தங்களது வாழ்வினை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கென மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள். செயற்கை கால்கள், தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, காதொலி கருவி. திறன்பேசி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சிலர் பிறவிலேயே மாற்றுத்திறனாளிகளாக இருப்பார்கள். சாலைவிபத்துகளினால் உடல் ஊனமுற்றோர்கள் அதிகம் உள்ளார்கள் நம்முடைய மாவட்டத்தில் கடந்த ஆண்டு புள்ளிவிவரப்படி சாலை விபத்துகளில் மட்டும் உயிரிழந்தவர்கள் 304 பேர். விபத்தில் உடனமுற்றோர்கள் 824. சாலை விபத்துக்கள் ஏற்படா வண்ணம் பல்வேறு விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
281 பயனாளிகளுக்கு ரூ.44.72 இலட்சம் மதிப்பில் 475 உபகரணங்கள் வழங்கப்பட்டள்ளது. மேலும் இதுபோன்ற முகாம்கள் நடைபெறும் போது நலத்திட்டஉதவிகள் மற்றும் உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தவறமால் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் சார்பாக அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரண அரங்குகளை பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலர் சு.சிவசங்கரன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் திருநெல்வேலி மேலாளர் எஸ்.ஷஜன், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் பெங்களுர் கண்காணிப்பு அலுவலர் லிற்டன் சர்கர், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் ஜவஹர். இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சரவணன், தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பூதலிங்கம் பிள்ளை, காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் ஆனந்த் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறன் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.