திண்டுக்கல் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை 21,817 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் இந்த மாதம் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இதில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கி, 25-ந் தேதி நிறைவடைகிறது. அதேபோல் பிளஸ்-1 மாணவர்களுக்கான தேர்வு வருகிற 5-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந் தேதி வரை பொதுத்தேர்வு நடக்கிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 217 பள்ளிகளில் படிக்கும் 21 ஆயிரத்து 817 மாணவ-மாணவிகள் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. அதேபோல் பிளஸ்-1 தேர்வை 22 ஆயிரத்து 216 பேர் தேர்வும் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 86 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் காப்பி அடிப்பது உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தேர்வு கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.
மேலும் பள்ளி ஆசிரியைகள் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து ஆசீர்வதித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் தேர்வு அறைகளுக்கு சென்று தங்களது தேர்வை எழுத துவங்கி உள்ளனர்.
தேர்வு நடைபெறும் மையங்களில் வெளி ஆட்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.