நிலக்கோட்டையில் கோட்டாட்சியர் சக்திவேல் தலைமையில் நடந்த வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள் பெறப்பட்டு புதிய ரேசன் கார்டு உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள நிலக்கோட்டை,ஒருத்தட்டு, பிள்ளையார்நத்தம்,விருவீடு,வத்தலக்குண்டு ஆகிய வருவாய் கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களின் குறைகளை நிறைவேற்றும் வகையில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மே-22 முதல் 29ம் தேதி வரை ஐந்து நாட்கள் திண்டுக்கல் வருவாய் கோட்டாச்சியர் சக்திவேல் மற்றும் வட்டாட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெறுகிறது. இதில் இரண்டாவது நாளான நேற்று
நரியூத்து,கோட்டூர்,
பச்சைமலையான்கோட்டை, நிலக்கோட்டை,கோடாங்கிநாயக்கன்பட்டி,நக்கலூத்து,சிலுக்குவார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பொதுமக்களிடமிருந்து 205 மனுக்கள் பெறப்பட்டது, இதில் பத்துக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு குடும்ப அட்டை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது