தஞ்சாவூர்.செப்.19.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2,032 வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டது .இதன் மூலம் ரூபாய் 17 கோடியே 75லட்சத்து 91 ஆயிரத்து 98 க்கு தீர்வுத் தொகையும் பெற்றுத் தரப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு காணும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்றது.
அதன்படி குடும்ப நல வழக்குகளுக்கான முதலாவது அமர்வில் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிபதி சத்யதாரா, குற்றவியல் நீதித்துறை நடுவர் சுசிலா, வக்கீல் சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு தீர்வு காணப்பட்டது .இரண்டாவது அமர்வில் சிவில் மற்றும் குற்ற வழக்குகள் 2வது கூடுதல் மாவட்ட நீதிபதி சுப்ரஜா ,குற்றவியல் நீதித்துறை நடுவர் நாகப்பன் வக்கீல் செந்தில்குமார் தலைமையில் தீர்வு காணப்பட்டது.
3வது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு முதன்மை சார்பு நீதிபதி முருகன் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கீதா வக்கீல் பழனி ஆகியோர் தலைமையில் தீர்வு காணப்பட்டது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அமர்வுகளோடு கும்பகோணம் பட்டுக்கோட்டை ஒரத்தநாடு பாபநாசம் பேராவூரணி திருவிடைமருதூர் திருவையாறு ஆகிய வட்ட சட்ட பணிகள் குழுவின் அமர்வுகள் உள்பட மொத்தம் 11 ஆயிரத்து 509 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.
இதில் 2302 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூபாய் 17 கோடியே 75 லட்சத்து 91 ஆயிரத்து 981 க்கு தீர்வு தொகையாக வழக்காடுகளுக்கு பெற்றுத் தரப்பட்டது .மக்கள் நீதி மன்றத்தின் நிரந்தர தலைவரும் நீதிபதியுமான ஜெயஸ்ரீ, சட்டப்பணி கள் ஆணைக்குழு செயலரும் சார்பு நீதிபதியுமான இந்திராகாந்தி மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் சங்க தலைவர் காமராஜ், செயலாளர் சுந்தர்ராஜன் மற்றும் வக்கீல்கள் நீதிமன்ற பணியாளர் கள் வழக்காடிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்