மதுரை பிப்ரவரி 24,
மதுரையில் தென்னவன் தலைமையில் 203 வது வார மரக்கன்று நடும் விழா
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில்
யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 203 வது வார மரக்கன்று நடுதல் மற்றும் நீர் ஊற்றுதல், கவாத்து பணி ஆகியன நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் ராகேஷ் முன்னிலை வகித்தார். உறுப்பினர் பாஸ்கரன் வரவேற்றார். உறுப்பினர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் தென்னவன் மரங்களின் பயன்கள், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினர். கலைவாணன், அபிநயா, நலினா ஆகியோர் கைகளினால் பூவரசு மரம் நடப்பட்டது.
20க்கும் மேற்பட்ட மரங்களுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டும் கவாத்து பணியும் நடைபெற்றது. விழாவில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர்கள் உறுப்பினர்கள் பரமேஸ்வரன், ஸ்டெல்லா மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் நீரூற்றும் பணி நடைப்பெற்றது. நிகழ்வில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு களப்பணி செய்தனர். மாணவி வினோதா நன்றி கூறினார்.