மதுரை டிசம்பர் 22,
மதுரையில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் 2000 ரூபாய் அபராதம் தொழிலாளர் மண்டல இணை ஆணையர் சுப்பிரமணியன் பேச்சு
மதுரையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கொண்டாடப்படும் ஆட்சி மொழி சட்ட வாரத்தை முன்னிட்டு,
வணிககர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை தொழிலாளர் நலத்துறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சித் துறை மாவட்ட துணை இயக்குனர் சுசிலா தலைமையேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கொண்ட தொழிலாளர் நலத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் பெ.சுப்பிரமணியன் பேசுகையில், வணிகர்கள் கட்டாயம் தமிழில் தான் பெயர் பலகை வைக்க வேண்டும். பெரும்பாலான வணிக கடைகளில் ஆங்கிலத்தில் தன் பெயர் இருக்கிறது. இப்படியே சென்றால் நம் வருங்கால சந்ததிக்கு தமிழ் வார்த்தையே தெரியாமல் போய்விடும். வணிக நிறுவனங்கள் 15 நாட்களில் பெயர் பலகையை தமிழில் மாற்றாவிட்டால் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார். முன்னதாக நிகழ்ச்சியில் துவக்க உரை நிகழ்த்திய தமிழ் வளர்ச்சித் துறை மாவட்ட துணை இயக்குனர் முனைவர் ம.சுசிலா நம்மில் பலர் பிள்ளைகளுக்கு அர்த்தம் தெரியாமலே பிற மொழி பெயரை வைத்திருக்கிறோம். அனைவரும் நல்ல தமிழ் பெயரை நம் பிள்ளைகளுக்கு சூட்ட வேண்டும். வணிகர்கள் கட்டாயம் தமிழில் தான் பெயர் பலகை வைக்க வேண்டும். தேவைப்பட்டால் தமிழுக்கு தமிழுக்கு கீழே சிறிய அளவில் பிற மொழியை வைத்துக் கொள்ளலாம். தமிழை தமிழர்களாகிய நாம் வளர்க்காமல் வேறு யார் தமிழ் நாட்டில் வளர்ப்பார்கள் என்று கூறினார். இந்நிழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமுலாக்கம்) கார்த்திகேயன், துணை ஆணையர் கோட்டீஸ்வரி. கண்காணிப்பாளர் சண்முகவள்ளி மற்றும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.