பூதப்பாண்டி, ஜுலை 23 –
கேரளா மாநிலத்தை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் (65) என்பவர் பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்சகுளம் பெரியகுளம் அருகே ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து வெள்ளை பன்றிகளை வளர்த்து வருகிறார். ஒரு நபர் கடந்த மூன்று தினங்களாக பண்ணைக்கு சென்று அந்த வளர்ப்பு பன்றிகளை விலைக்கு கேட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் பிரான்சிஸ் சேவியர் பண்ணைக்கு சென்று பார்க்கும் போது அங்கிருந்த இருபது பன்றிகளையும் காணவில்லை. இது குறித்து அவர் பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


