திங்கள் சந்தை, மார்- 8
திங்கள்சந்தை அருகே ஆலங்கோடு தென்னந்தோட்டத்து விளையை சேர்ந்தவர் சுபாஷ் (30) வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று அதிகாலை திங்கள் நகரில் இருந்து இரணியல் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஆமத்தான்பொத்தை பகுதி வளைவில் ஆட்டோ சென்றபோது எதிரே வேகமாக வந்த பைக் ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஆட்டோவின் முன்பக்கம் பலத்த சேதமடைந்து சுபாஷுக்கும், விபத்து ஏற்படுத்திய பைக்கு ஓட்டி வந்த கிருஷ்ணா (24)எம்பருக்கும் காயங்கள் ஏற்பட்டது. ரெண்டு பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்பாக இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.