தஞ்சாவூர் பிப்.14.
தஞ்சாவூர் சட்ட பேரவை தொகுதி க்கு உட்பட்ட 5 இடங்களில் நடை பெற்ற மக்களுடன் முதல்வன் திட்ட முகாமில் 159 பேருக்கு ரூபாய் 2.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி .செழியன் வழங்கினார்.
தஞ்சாவூர் மானேஜிபட்டி மாரியம்மன் கோயில் வளாகம், பிள்ளையார்பட்டி வடக்குத்தெரு சமுதாய கூட கட்டடம், நாஞ்சிகோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபம், மாரியம்மன் கோவில் ஊராட்சிக்குட்பட்ட மேட்டு தெரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஆகிய 5 இடங்களில் மக்களுடன் முதல்வன் முகாம்களை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்து பேசினார்.
இந்த 5 முகாம்களிலும் மொத்தம் 159 பயனாளிகளுக்கு ரூபாய் 2.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார், தஞ்சாவூர் எம். பி முரசொலி,சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் (திருவையாறு) டி கே ஜி நீலமேகம் (தஞ்சாவூர்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மேயர் சண், ராமநாத ன் , துணை மேயர் அஞ்சுகம் பூபதி, உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர் சங்கர், தாசில்தார் அருள்ராஜ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்