காளையார் கோவில்:ஏப்:02
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கணவன் , மனைவி காரில் வரும்போது அவர்களை வழிமறித்து தாக்க முயன்றதாக போலீசார் இருவரை கைது செய்துள்ளனர் . இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :
காளையார்கோவிலை அடுத்துள்ளது சிறு செங்குளிப்பட்டி . இந்த ஊரைச் சேர்ந்தவர் கருப்பையா அம்பலம் மகன் பாண்டி . இவர் தனது மனைவி ரஷ்யா என்பவருடன் காளையார்கோவில் வந்துவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்த போது அதே ஊரைச் சேர்ந்த காளிதாஸ் , தட்சிணாமூர்த்தி , மணிகண்டன் ,கர்ணன் , அன்புச்செல்வம் , காளீஸ்வரன் , மகேந்திரன் , மாதேஸ்வரன் ஆகியோர் காரை வழிமறித்து சேதப்படுத்தி ஆயுதங்களால் தாக்க முயற்சித்த போது வளர்மதி என்பவர் சத்தம் போட்டதில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து தடுத்துள்ளனர் . கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன்கோவிலில் நடந்த திருவிழாவில் நடந்த சிறு பிரச்சனையை மனதில் வைத்துத்தான் இந்த ஆயுதங்களால் தாக்க முயன்ற தகராறு ஏற்பட்டுள்ளது . இந்தத் தகராறில் ஈடுபட்டவர்களில் மணிகண்டன் மற்றும் கர்ணன் ஆகியோர்களை போலீசார் கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர் .