ஈரோடு மே 4
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின் பேரில் அமைச்சர் முத்துசாமி வழிகாட்டுதலின் படி ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் ஏற்பாட்டில் ஈரோடு மணி கூண்டு பகுதியில் கடந்த மே மாதம் 1 ந் தேதி முதல் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது
இதை அப்போது அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார் இதை தொடர்ந்து தினமும் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தொடர்ந்து நீர் மோர் வழங்கப்பட்டது இது மட்டுமல்லாமல் நீர்மோர் பந்தலில் 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்கும் வகையில் பெரிய டேங்க் வைக்கப்பட்டு இருந்தது இதனால் அந்தப் பகுதிக்கு வந்த பொதுமக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் இரவிலும் தண்ணீர் அருந்தி சென்றனர்
ஈரோடு மாநகரின் மையப் பகுதியான மணிகூண்டு பகுதியில் ஏராளமான ஜவுளிக்கடைகள் நகைக்கடைகள் பேன்சி கடைகள் காலணி கடைகள் போன்ற ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன இந்த கடைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள் இவர்கள் கடும் வெயில் காரணமாக மணி கூண்டு பகுதியில் செயல்பட்ட நீர் மோர் பந்த லுக்கு வந்து நீர்மோர் மற்றும் தண்ணீர் அருந்தி சென்றனர்
இது மட்டும் அல்லாமல் இந்த வழியாக சென்ற பஸ்சின் டிரைவர்கள் பஸ்சை நிறுத்தி நீர்மோர் அருந்தி விட்டு தாங்கள் கொண்டு வந்த பாட்டிலிலும் நீர் மோர் வாங்கி சென்றனர் பஸ்ஸில் உள்ள பயணிகளும் நீர்மோர் அருந்தி தாகத்தை தணித்து கொண்டனர் இவ்வாறாக தினமும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நீர்மோர் அருந்தி உள்ளனர் இதனால் தினமும் சுமார் 1100 லிட்டர் மோர் வரை பயன்படுத்தப்பட்டுள்ளது இடைஇடையே தர்ப்பூசணி வாழைப்பழம் இளநீர் போன்றவையும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் திமுக முக்கிய பிரமுகர்கள் பலர் தினமும் கலந்துகொண்டு பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான நேற்று வரை சுமார் 34 நாட்கள் தொடர்ந்து இது வரை 2 1/2 லட்சம் பேருக்கு நீர்மோர் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியை திமுக வினர் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பெரிதும் பாராட்டினர்.