தஞ்சாவூர். செப்.29.
குடும்ப வன்கொடுமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பெண்கள் உதவி கோர 181என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றால் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம்.
மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட சமூக நல அலுவல கம் சார்பில் நடைபெற்ற ஒருங்கிணைந்த சேவை மைய மாவட்ட செயலாக்கக் குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தஞ்சாவூர் அரசு இராசாமிராசுதார் மருத்துவமனையில் ஒருங்கிணை ந்த சேவை மையம் சுழற்சி முறை யில் 24 மணி நேரமும் செயல் படுகிறது .மகளிர் திட்டம் சார்பில் செயல்படுகிற மகளிர் சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மகளிர் குழுக்கள் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் ஆகியோர் குடும்ப வன்கொடுமை மற்றும் பெண்களுக்கான உதவி கோரி 181 எண்ணுக்கு தொடர்பு கொண்டு மையத்தின் சேவை களை பெறலாம்.
அவசர நடவடிக்கை மற்றும் மீட்பு பணி, காவல் உதவி, மருத்துவ உதவி சட்ட உதவி, மனநல ஆலோசனை மற்றும் உடனடி தங்கும் வசதி(5நாட்களுக்கு) ஆகியவை மையத்தின் மூலம் அளிக்கப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சித் தலைவர்
கூட்டத்தில் உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார் மாவட்ட சமூக நல அலுவலர் லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்