திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியில் 111 – வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாநில தலைவி அருட்சகோதரி பவுலின் பாத்திமா தலைமை தாங்கினார்.திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) கே.வெற்றிச்செல்வி, திண்டுக்கல் நகர் சரக வட்டாரக்கல்வி அலுவலர் பி.விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.திண்டுக்கல் கல்விப்பணி ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி விக்டோரியாமேரி வாழ்த்துரை வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மேட்டுப்பட்டி பங்குத்தந்தை அருட்பணி வி.செல்வராஜ், பாசத்தோட்டம் அருட்பணி சைமன்,தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் அ.வின்சென்ட் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.அதனை தொடர்ந்து கல்வி புரவலர்கள் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் புரவலர் லயன்.எம்.திபூர்சியஸ், முத்தழகுபட்டி ஜீவன் ஆயில் ஸ்டோர் உரிமையாளரும், காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட தலைவரும், சமூக ஆர்வலருமான லயன்.என்.தனுஷ்கோடி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியில் சிறப்பாக ஆசிரியை பணியை செய்த பள்ளி தாளாளர் அருட்சகோதரி.
ஆர்.கரோலின்ராணி,
, பள்ளி தலைமையாசிரியை அருட்சகோதரி. எம்.ஆரோக்கியசெல்வி,
எ.நம்பிக்கைமேரி,ஜெ.இசபெல்லாமேரி, டி.விமலா ஜோஸ்பின், சி.சிறுமணிஜெயந்தி,சி.லூயிஸ்விமலா,
எல்.புளோரா, எ. காணிக்கைமேரி, அ.எலிசபெத்ராணி, எ.ஜெயா, எம். விண்ணரசி, அ.டெய்சி ராணி ஆகியோர்களுக்கு கல்வி சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தலைமை ஆசிரியர் அந்தோணி செல்வராஜ், ஆசிரியர் ஆடி செல்வராஜ், எ.இன்னாசி ராஜா, புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியை, பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.