தஞ்சாவூர். பிப்.12.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை யின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளை மேம்படுத்த முதல் கட்டமாக ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர் மரபினர் நல வாரியம் சார்பில் தஞ்சாவூர்,திருவாரூர், மயிலாடு துறை ,நாகை ,புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமை தாங்கி னார் .மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம், சீர் மரபினர் நல வாரிய துணைத்தலைவர் அருண்மொழி,ஆணையர் சம்பத், எம்பிக்கள் கல்யாணசுந்தரம், முரசொலி ,எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ்குமார் ,மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது
முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் ,அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 ஆயிரமாக உயர்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது .கடந்த 2024 ஆம் ஆண்டு வரை 15 மாவட்டங்களில் 2 ஆயிரத்து17 பேர் சீர்மரபினர் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர் கடந்த 3 மாதங்களில் மட்டும் 15 ஆயிரம் பேர் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அதில் 10 ஆயிரம் பேருக்கு உறுப்பினர் நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டு ள்ளது .மீதமுள்ள 5 ஆயிரம் பேருக்கு விரைவில் வழங்கப்படும். இந்த 15 மாவட்டங்களில் 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான இலக்கில், தற்போது 15 ஆயிரம் பேர் உறுப்பினர்கள் சேர்ந்துள்ள னர் .இன்னும் 3 மாதத்திற்குள் 35 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப் பட்டோர் நல துறையின் கீழ் இயங்கும் 1,371 மாணவ – மாணவி களின் விடுதிகளை மேம்படுத்த முதல் கட்டமாக ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக ரூபாய் 50 கோடி கேட்டுள்ளோம்.
தற்போது மாணவ – மாணவி களின் விடுதிகளை முழுமையாக பராமரிக்கும் பணி நடந்து வருகிறது .விரைவில் கட்டிடங்கள் அனைத்தும் புதிதாக மாற்றி தரப்படும் .இவ்வாறு அவர் கூறினார்கள்