பூதப்பாண்டி, ஜூலை 29 –
10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நாம் தமிழர் மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பரிசு வழங்கினார். கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட மூன்று பள்ளிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து பாராட்டி அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.