சிவகங்கை, 09 மார்டின் குழுமத்தின் சார்பாக ஏழை மாணவர்களின் திறன்களை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகளை வழங்கும் செம்மண் முற்றம்” எனும் பயிற்சி மையம் காளையார்கோவில் சீகூரணியில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக சீகூரணி எனும் கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் நிலத்தை செம்மண் அறக்கட்டளைக்கு மார்டின் குழுமத்தின் சார்பாக இலவசமாக வழங்கியது. மேலும், இந்நிலத்தில் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் பயிற்சி மையத்திற்கான கட்டிடம் கட்டியதோடு அதற்கு தேவையான கணினி, மேஜை நாற்காலிகள், எழுது பொருட்கள் உள்ளிட்டவற்றையும் வழங்கியுள்ளனர்.
மேலும்
இந்த பயிற்சி மைய கட்டிடத்தினை
செம்மண் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர். நோயல் தலைமையில்
மார்டின் குழுமத்தின் இயக்குனர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய கிறிஸ்தவ உயர் கல்வி சங்கத்தின் இயக்குனர் அருள் முனைவர் சேவியர் வேதம் மற்றும் மார்டின் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஜார்ஜ் மார்ஷல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து
நிகழ்ச்சியில் மார்டின் குழுமத்தின் இயக்குனர். டாக்டர் லீமா ரோஸ் மார்டின் பேசுகையில் மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் நல்ல வேலை கிடைப்பதற்கும் வாழ்வின் சவால்களை எதிர்கொள்வதற்கும் பள்ளி படிப்போடு வாழ்வியல் திறன்கள் மிக அவசியம் ஏழை மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மார்டின் குழுமமும் இப்பயிற்சி மையத்தினை துவக்கியுள்ளது.
மேலும்
பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், கணினி பயிற்சி பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல்களையும் இப்பயிற்சி மையம் வழங்கும்
ஏழை மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தி அவர்களுக்கு சிறப்பான ஒரு எதிர்காலத்தை இந்த பயிற்சி மையம் நிச்சயம் வழங்கும் என அவர் தெரிவித்தார்.