சங்கரன்கோவில், ஜூலை 10 –
சங்கரன்கோவில் தாலுகா களப்பாகுளத்திலிருந்து உடப்பன்குளம் செல்லும் இணைப்பு சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் ஆஷாடனநவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஆஷாடன நவராத்திரி விழா கடந்த ஜூன் 25-ம் தேதி தொடங்கியது. 11 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் தினமும் வாராஹி அம்மன் மற்றும் பதிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் தீபாரதனைகள் நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான ஜூலை 5-ம் தேதி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு இதில் சிறப்பு யாகங்களும், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றது. பூஜைகளை ஸ்ரீ மனோன்மணிஅம்பாள் உபவாசகர் சக்திவேல் நடத்தினார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தொழில் அதிபர்கள் சிஎஸ்எம்எஸ் சங்கரசுப்பிரமணியன், அனுசியா மாரிமுத்து, மாணிக்கம், கணேசன், தேன்மொழி முத்துசாமி, சக்திவேல், மாணிக்கம், வெங்கடேஷ், ராஜலட்சுமி, சுப்பிரமணியன், சந்தன பாண்டியன், பரமசிவன், குணசேகரன், மகாலிங்கம், அங்கப்பன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் வழிபாட்டு குழுவை சேர்ந்த சக்திவேல், பரமகனேசன், ஜெயராமன், முருகன், பலவேசம் மற்றும் செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.