திருப்பூர், செப். 13 –
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி அருகே பொதுமக்களிடையே பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்: அதிமுக கூட்டணியை பார்த்து ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது.
நமது கூட்டணி வெற்றிக் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திருப்பூர் மாநகராட்சியில் 40 நாட்களாக முறையாக குப்பை அள்ளவில்லை. மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியவில்லை. 5 முறை வெளிநாடு சென்றும் எந்த பயனும் இல்லை. ஏட்டளவில் மட்டுமே உள்ளது.
அமெரிக்க வரி விதிப்பு காரணமாக பின்னலாடை பனியன் தொழில் 50 சதவீதம் நலிவடைந்து விட்டது. தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்துள்ளனர். இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு தொழிலை சரி செய்ய முதல்வர் என்ன செய்தார். மத்திய அரசை தொடர்பு கொண்டு இதற்கு ஒரு தீர்வு கண்டிருக்க வேண்டும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு குரல் கொடுத்திருக்க வேண்டும். இங்கு இருக்கும் தொழில் செய்ய முடியாமல் இருக்கும் போது வெளி நாட்டில் சென்று முதலீடு ஈர்ப்பதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
இந்த பகுதி தொழில் நிறைந்த பகுதி இது சிறப்பாக செயல்பட்டால் தான் இங்கு உள்ள மக்கள் மட்டும் அல்ல; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களும் வளர்ச்சி அடைய முடியும். இதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு உங்களை வீழ்த்துவதற்கு அவர்களுடைய ஓட்டை பயன்படுத்துவார்கள் என தெரிவித்தார்.
பல்வேறு கோரிக்கைகளை கொடுத்துள்ளீர்கள். அதிமுக ஆட்சி வந்ததும் அனைத்தும் தீர்க்கப்படும். ஏழை, எளிய குடிசை வீட்டில் உள்ளவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்படும். தாழ்த்தப்பட்ட மக்கள் ஏழை மக்களுக்கு அரசாங்கமே இடத்தை வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தருவோம். ஒவ்வொரு தீபாவளிக்கும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தில் பதிவு செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 75,000 மானியம் வழங்கப்படும். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று கோசம் எழுப்பியவாறு பாய் பாய் ஸ்டாலின் என பரப்புரையை முடித்தார்.
பரப்புரை நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் திருப்பூர் மாநகர செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, எம்.எஸ்.எம். ஆனந்தன், முன்னாள் எம்பி சிவசாமி, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள்
மடத்துக்குளம் மகேந்திரன், திருப்பூர் வடக்கு கே.என். விஜயகுமார், சுந்தராம்பாள்,
மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம், திருப்பதி கண்ணப்பன், பி.கே.எம். முத்து, ஹரிஹர சுதன், தங்கராஜ் வானவில் கனகராஜ், வி.கே.பி. மணி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேல் குமார் சாமிநாதன், சங்கீதா சந்திரசேகரன், லோகநாதன் அட்லஸ் லோகநாதன், கண்ணன், பெருமாநல்லூர் வடக்கு ஒன்றியம் ராதாமணி சிவசாமி, சுஜாதா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள், கழக ஒன்றிய செயலாளர் கழக நிர்வாகிகள், திருப்பூர் வடக்கு தெற்கு இரண்டு இடங்களில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. முப்பதாயிரத்திற்கு மேற்பட்டோர்
பெரும் திரளாக கலந்து கொண்டனர்.



