வேலூர், ஜூலை 29 –
வேலூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை குற்றங்கள் ஏன் அதிகரித்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து அதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் சரக டிஐஜி தர்மராஜன் பேட்டி.
வேலூர் காவல் சரகர் அலுவலகத்திற்கு டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்க வந்த தர்மராஜனுக்கு காவல் துறையின் முழு மரியாதை வழங்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்டார். அதற்கு பின்னர் அவரை வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அலுவலகத்தில் கையெழுத்திட்டு வேலூர் சரக டிஐஜியாக தர்மராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார்.