வேலூர், ஜூலை 28 –
வேலூர் கஸ்பா, மேட்டு பஜார் தனியார் மண்டபத்தில் அதிமுக சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் டாக்டர் விஜய் வெங்கடேஷ் தலைமையில் இன்று நடந்தது. முகாமை மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு துவக்கி வைத்தார். முகாமில் டாக்டர் சிவகுமார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் என 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுநல ஆலோசனை, இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, இரத்த அழுத்தம் பரிசோதனை மற்றும் பல்வேறு நோய்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.
ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இதில் பகுதி கழக செயலாளர் நாகு (எ) நாகராஜ், தாஸ், ரகு, வட்ட செயலாளர் மோகன், வட்ட பிரதிநிதி சீனிவாசன், வாசு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வி.பி.எம். குமார், அம்மா பேரவை மாவட்டத் துணை செயலாளர் என். பாலாஜி, வட்ட செயலாளர் டீக்காராம், கோபி, பி.கே. பாபு, உலி என்கிற தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.