திண்டுக்கல், மே. 12-
வேம்பார்பட்டியில் இலவச கண் சிகிச்சை மற்றும் லென்ஸ் பொருத்தும் சிறப்பு முகாம்.
திண்டுக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் தமியான் கண் மருத்துவமனை மற்றும் திண்டுக்கல் பல்நோக்கு சமூகப்பணி மையம் (டிஎம் எஸ்எஸ்எஸ்) வேம்பார்பட்டி பங்கு புனித லூர்து அன்னை ஆலயம் இணைந்து வேம்பார்பட்டியில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை மற்றும் லென்ஸ் பொருத்தும் சிறப்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேம்பார்பட்டி பங்குத்தந்தை டாக்டர்.ஐ. அந்தோணி சேகர், கு.ஆவரம்பட்டி பங்குத்தந்தை எஸ்.ஜான் நெப்போலியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நிகழ்ச்சிக்கு வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்
பி.கந்தசாமி (எ) கண்ணன், துணைத் தலைவர் ஜி. சச்சுதானந்தம், வேம்பார்பட்டி ஊராட்சி செயலாளர் எம்.மார்டின் கென்னடி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தார்கள். தமியான் கண் மருத்துவமனை டாக்டர். ஆக்னேஸ் சேவியர் கலந்து கொண்டு முகாமை நடத்தினார். இம்மகாமில் கண் தொடர்பான அனைத்து குறைபாடுகளும் இலவசமாக பரிசோதனை செய்து ஆலோசனையும் ,சிகிச்சையும் அளிக்கப்பட்டது. கண்புரை நோயாளிகள் முகாமில் இருந்து தமியான் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் இலவசமாக லென்ஸ் (ஐஓஎல்) பொருத்தப்பட்டன. இந்த கண் சிகிச்சை பரிசோதனையில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருந்து, உணவு, உறைவிடம், போக்குவரத்து அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த இலவச கண் சிகிச்சை மற்றும் லென்ஸ் பொருத்தும் சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.