குளச்சல், ஆக. 11 –
கருங்கல் அருகே தொழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பிரதீஷ் (33). நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக உள்ளார். சம்பவ தினம் பிரதீஷ் பைக்கில் நாகர்கோவில் சென்று கொண்டிருந்தார். வெள்ளிசந்தை அருகே சாந்தபுரத்தில் செல்லும்போது செருப்பாங்கோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் ஓட்டி வந்த பைக் பிரதீஷ் பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் பிரதீஷ் படுகாயம் அடைந்து ராஜாக்கமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார். வெள்ளிச்சந்தை போலீசார் ஸ்ரீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


