கோவை, ஜூலை 30 –
கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் வீல் சேர் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு மற்றும் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து வீல் சேர் கிரிக்கெட் பிரீமியம் டிராபி 2025 நடத்தியது. மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டிகள் வீல் சேர் கிரிக்கெட் அசோசியேஷன் சிஇஓ கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கொங்குநாடு கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ. வாசுகி மற்றும் அரசு பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுப்பிரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.
மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் திருப்பூர், சேலம் மற்றும் கோயமுத்தூர் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டார்கள். மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் இறுதி ஆட்டத்தில் சேலம் டிராகன்ஸ் மற்றும் கோயம்புத்தூர் கிங்ஸ் அணிகள் விளையாடினர். இதில் சேலம் டிராகன்ஸ் அணி முதல் இடத்தையும், கோயமுத்தூர் கிங்ஸ் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தார்கள்.
மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த பரிசளிப்பு விழாவில் வீல் சேர் கிரிக்கெட் அசோசியேஷன் சிஇஓ கஜேந்திரன்,
வீல் சேர் கிரிக்கெட் அசோசியேஷன் தமிழ்நாடு தலைவர் ராமச்சந்திரன், கவிதா ஸ்ரீ டைரக்டர் ஆப் பிசிகல் எஜுகேஷன், கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலந்து கொண்டார்கள். மாலையில் வெற்றி பெற்ற சேலம் டிராகன்ஸ் அணிக்கும் இரண்டாம் இடம் பிடித்த கோவை கிங்ஸ் அணிக்கும் கோப்பை மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
இது குறித்து வீல் சேர் கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு கோ ஆர்டினேட்டர் திரு. சின்னத்துரை தெரிவிக்கையில் விளையாட்டுத்துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் அதிக அளவில் உள்ளது. கிரிக்கெட் போட்டிகளை தேர்வு செய்து வீல் சேர் கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சார்பில் தமிழக முழுவதும் நாங்கள் போட்டிகளை நடத்தி வருகின்றோம். இதற்கு தமிழக அரசு எங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். விளையாட்டுத் துறைகளிலும் கிரிக்கெட் போர்டுகளிலும் எங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்று தெரிவித்தார்.