கிருஷ்ணகிரி, செப். 29 –
கிருஷ்ணகிரி மாவட்ட ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டி ஊராட்சி பாப்பகொட்டை அப்துல் கரீம் என்பவரின் தாத்தாவின் பூர்வீக புஞ்சை நிலம் உள்ளது. நிலத்தில் அப்துல் கரீம் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். விவசாய நிலத்தை விவசாயம் செய்ய விடாமல் அதே ஊரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் S/o சின்னக்கண்ணு என்பவரும் இவருடைய மகன்களான பூபதி, கார்த்திக் மற்றும் அப்துல் சர்தார், சாதிக் பாஷா இவர்கள் அனைவரும் அப்துல் கரீமுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் உள்ள மின் மோட்டார் மற்றும் மின் இணைப்பு பாக்ஸ்ஷை அடித்து உடைத்து நீ இந்த நிலத்தை விவசாயம் செய்ய முடியாது என்று நிலத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தியும், விவசாயம் செய்தால் உன்னை நாங்கள் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி வருகிறார்கள்.
அப்துல் கரீம் என்பவர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா எதிர்பார்ப்புடன் காத்து உள்ளார். மேலும் விவசாய நிலத்தில் உள்ள 5 HP மின்மோட்டாரை கிணற்றில் வீசியும் மின்னிணைப்புகளை நாசப்படுத்திய இந்த நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாய் உள்ளது. இப்பகுதியில் இது போன்ற சம்பவங்கள் நடக்கா வண்ணம் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.



