அரியலூர், மே. 12-
அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்திலுள்ள பெட்ரோல் பங்கிற்கு திருச்சியில் இருந்து 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மற்றும் 8 ஆயிரம் லிட்டர் டீசல் ஏற்றிகொண்டு டேங்கர் லாரி ஒன்று தவுத்தாய்குளம் நோக்கி வந்துள்ளது.
அப்போது வாரணவாசி பிள்ளையார் கோவில் அருகேயுள்ள மின்கம்பத்தில் மோதி அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து சனிக்கிழமை மதியம் 03 மணியளவில் விபத்துள்ளானது.
இதில் லாரியில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் வீணானது. இதனையறிந்த அரியலூர் தீயணைப்பு துறையினர் தீ ஏதும் பரவாமல் தடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் லாரியில் வந்த கீளினருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரக்கபட்டுள்ளார். ஓட்டுனர் தப்பியோடியதை அடுத்து கீழப்பழூவூர் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.