ஈரோடு, ஆக. 18 –
மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி கடம்பூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். குத்தியாலத்தூர் ஊராட்சி, கடம்பூர் பகுதியில் 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.78.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கடம்பூர் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை பார்வையிட்டு ஒப்பந்த விபரம், பணி காலம், அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி விபரம், கட்டிட வரைப்படம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், கடம்பூரில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் விபரம், தினசரி வருகை தரும் நோயாளிகள் விபர பதிவேடு, மருத்துவ கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பயன்பாடு, மருத்துவ பணியாளர்கள் விபரம், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட விபரம், கர்ப்பிணித்தாய்மார்கள் விபரம் பதிவேடு மற்றும் தொடர் கண்காணிப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இருட்டிபாளையம் காந்தி நகர் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் 22 பயனாளிகள் வீடுகள் கட்டி வருவதை பார்வையிட்டு இத்திட்டத்தின் கீழ் அப்பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள மொத்த பயனாளிகள் விபரம், வீடு கட்ட பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், வீடு கட்டுமான பணிகள் விபரம், பணி காலம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பசுவனாபுரம் பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவ, மாணவியர்களின் சேர்க்கை விபரம், 10 வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சதவிகிதம், மாணவர்களின் வாசிப்பு திறன், கழிப்பறை வசதி, பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மாணவ, மாணவியர்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், தமிழ்நாடு அரசின் சார்பில் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கு வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் சுவை மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு உணவுப்பட்டியல் விபரம், உணவுப் பொருட்களின் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



