இராமேஸ்வரம், செப். 24 –
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஒரு கோடியே 14 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளதாக இணை ஆணையர் செல்லத்துரை தகவல் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கடந்த மாதம் பக்தர்களால் அளிக்கப்பட்ட காணிக்கை உண்டியல் எண்ணும் பணி இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் காலையில் தொடங்கியது. மாலை வரை கணக்கெடுக்கப்பட்டது.இதில் ஒரு 1 கோடியே 14 லட்சத்தி 32 ஆயிரத்து 252 ரூபாய் தங்கம் 32 கிராம் வெள்ளி 3 கிலோ 800 கிராம் மற்றும் அயல்நாட்டு நோட்டுகள் 114 காணிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக இணை ஆணையர் தெரிவித்தார்.
உண்டியல் எண்ணும் பணியில் சிவகங்கை மண்டல இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர், தக்காரான சிவகங்கை மண்டல இணை ஆணையரின் பிரதிநிதி, ராமநாதபுரம் முதுகுளத்தூர் ஆய்வர்கள், உதவி ஆணையர் ரவீந்திரன், செயல் அலுவலர் முத்துச்சாமி, மேலாளர் வெங்கடேசன், பேஷ்கார்கள் கமல்நாதன், நாகராஜன், முனியசாமி ,உழவாரப்பணி ஆன்மீக குழுவினர், வங்கி பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்டனர்.



