ராமநாதபுரம், ஜுலை 28 –
ராமநாதபுரத்தில் ஸ்ரீ வேதா அறக்கட்டளை ஐந்தாம் ஆண்டு முன்னிட்டு இணைந்த கைகள் அறக்கட்டளை, ராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம் கேணிக்கரை டி.டி விநாயகர் பள்ளியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் சுமார் 500 பேர் கலந்து கொண்டு கண் பரிசோதனை மேற்கொண்டனர்.
ஸ்ரீ வேதா அறக்கட்டளை நிறுவனர் மற்றும் அறங்காவலர் வீர மூர்த்தி, இணைந்த கைகள் அறக்கட்டளை நிர்வாகி சுரேஷ்- திருச்செல்வி தம்பதியினர் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்து உரிய மருந்து மாத்திரைகள் வழங்கினர். அறுவை சிகிச்சை செய்ய தகுதி உள்ள நபர்கள் பட்டியல் தயார் செய்து உள்ளனர். இவர்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர். முகாம் ஏற்பாடுகளை வேதா அறக்கட்டளை மணிமாறன், சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.