போகலூர், அக். 2 –
நாடார் பேரவை தலைவர் பனை வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), கார்த்திக் நாராயணன் மற்றும் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனையின் பேரில் மாவட்ட தலைவர் வேல்முருகன் முன்னிலையில் கிழக்கு இராமநாதபுரம் நாடார் உறவின்முறைச் சங்கம் மற்றும் நாடார் பேரவை சார்பில் நினைவு தினம் கிழக்கு இராமநாதபுரம் நாடார் உறவின்முறைச் சங்கம் முன்பு அலங்கரிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, கிழக்கு ராமநாதபுரம் நாடார் உறவின்முறைச் சங்க தலைவர் பழனிச்சாமி நாடார், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கம், ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம், திமுக நகராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம், வடக்கு ஒன்றிய செயலாளர் நாகலிங்கம், திமுக மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே. பிரவீன், மதிமுக மாவட்ட செயலாளர் வி.கே. சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கிழக்கு இராமநாதபுரம் நாடார் உறவின்முறைச் சங்கம் நிர்வாகிகள் தனுக்கொடி, சுயராஜ்யம், சக்திவேல், உலகநாதன், ஜெயக்குமார், தங்கராஜ், நாடார் பேரவை சார்பில் மாவட்ட அவைத் தலைவர் ஜார்ஜ், மாவட்ட பொருளாளர் மகேந்திரன், சமக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், சமக அவைத் தலைவர் அங்குச் சாமி, இளைஞரணி செயலாளர் ஜான், பரமக்குடி நகர் அமைப்பாளர் மாதேஸ்வரன், மண்டபம் ஒன்றிய தலைவர் பால முனீஸ்வரன், இராமநாதபுரம் ஒன்றிய தலைவர் அஜித், தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் விஜய் பாபா, சாயல்குடி நகர் தலைவர் புனித் ராஜ், சச்சின், சிவா, பழனி, விவேக், குமரேசன், முகுந்தன், ப்ரிதிவிராஜ் மற்றும் கிழக்கு இராமநாதபுரம் நாடார் உறவின்முறைச் சங்க நிர்வாகிகள், நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



