ஈரோடு, ஜூன் 20 –
ராகுல் காந்தி பிறந்தநாள் ஈரோடு மாநகர மாவட்டம் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் திருச்செல்வம் தலைமையில் 55 பேர்களுக்கு இலவச வேட்டி, பள்ளிக் குழந்தைகளுக்கு பேக்கரிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக ஈரோடு செங்கோடம் பாளையத்தில் உள்ள அரிமா மாற்று திறனாளிகள் பள்ளியில் மாவட்டச் செயலாளர் கோபி தலைமையில் காலை உணவு வழங்கப்பட்டது.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர் தலைமையில் வழங்கப்பட்டது. ஈரோடு சிஎஸ்ஐ ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் ஈரோடு மரப்பாலத்தில் காங்கிரஸ் மண்டலத் தலைவர் முன்னாள் கவுன்சிலர் ஜாபர் சாதிக் தலைமையில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. முன்னாள் தலைவர் ஈ.பி.ரவி மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, செயலாளர் கோபி மற்றும் நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.