அரியலூர்,மே:05
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில்,சிந்தாமணி,தா.பழூர், காரைக்குறிச்சி,மதனத்தூர்,கோட்டியால் (செக்கடி), கோட்டியால் – பாண்டிபஜார் ஆகிய ஊர்களில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு,கோடைக்கால தண்ணீர் பந்தலை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர்,பழங்கள் வழங்கினார். இந்நிகழ்வில் பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் இரா.அண்ணாதுரை,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை,ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ்,பொருளாளர் த.நாகராஜன்,ஒன்றிய துணை செயலாளர்கள் க.சாமிதுரை,இராஜேந்திரன்,இந்துமதி நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் கோவி.சீனிவாசன்,கண்ணதாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ந.கார்த்திகைகுமரன், முனைவர் முருகானந்தம், எழிலரசி அர்ச்சுனன் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு திமுக எம்எல்ஏ தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்



